இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பூமி. பொங்கலை ஒட்டி 14ஆம் தேதி ஓடிடியில் வெளியான இப்படம் வெளியாகி விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் உள்ளானது.
இந்நிலையில் பூமி படம் பார்த்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டரில் இதுவரை நான் பார்த்த படங்களில் பூமி போன்ற மோசமான படத்தை பார்த்ததில்லை என்று பதிவிட்டிருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான மிக மோசமான படங்களை மேற்கோள் காட்டியது மட்டுமல்லாமல் இயக்குநர் லக்ஷ்மணுடன் பணிபுரிவதை ஜெயம் ரவி நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.