தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’நம் உறவுக்கு வயதில்லை’ - இளையராஜா குறித்து பாரதிராஜா - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

சென்னை: இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் பாரதிராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா குறித்து பாரதிராஜா
இளையராஜா குறித்து பாரதிராஜா

By

Published : Jun 2, 2021, 2:26 PM IST

இசைஞானி இளையராஜா இன்று (ஜூன் 2) தனது 78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் என சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் இளையராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உனக்கும்,
உன் இசைக்கும்
நம் உறவுக்கும்
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள் டா
உயிர்த் தோழன் பாரதிராஜா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘16 வயதினிலே’ உள்ளிட்ட பாரதிராஜாவின் பல்வேறு படங்களில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details