தமிழில் 'நான் ஈ', 'புலி', 'முடிஞ்ச இவனப் புடி' , 'ரத்த சரித்தரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சுதீப். இவர் தற்போது ஆர்.ஆர்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் 'பயில்வான்' படத்தில் நடித்துவருகிறார். இப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தோல்வியை சுலபமா ஒத்துக்க மாட்டேன் 'பயில்வான்' சுதீப் - பயில்வான்
நடிகர் சுதீப் நடிப்பில் உருவாகி வரும் 'பயில்வான்' படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
bailwan
இப்படத்தில் கிச்சா சுதீப்புடன் சுனில் ஷெட்டி, அகன்ஷா சிங், சுஷாந்த் சிங் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இப்படம் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான குஸ்தியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.