காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியதையடுத்து பாகிஸ்தான் அரசு இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிட தடை விதித்தது.
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்க பிரதமருக்கு கோரிக்கை! - மோடி
இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டுமென அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
AICWA
இதனையடுத்து, அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், "பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு இந்திய திரைப்படங்களில் பணியாற்ற முற்றிலும் தடை விதிக்க வேண்டும். பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்களின் ஒட்டுமொத்த வர்த்தகமும் துண்டிக்கப்பட வேண்டும். இந்த தடையை அமல்படுத்தும்வரை வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபடப்போகிறோம்” என கூறப்பட்டுள்ளது.