தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் இணையும் பாலாஜி மோகன் - சித்தார்த் - மீண்டும் இணையும் பாலாஜி மோகன் - சித்தார்த்

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவரும் தனுஷ், அதன்பிறகு செல்வராகவன், மாரி செல்வராஜ் ஆகியோருடன் பணியாற்றவுள்ளார். இதன் காரணமாக சித்தார்த் நடிப்பில் பாலாஜி மோகன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

Balaji mohan join hands with siddharth
Balaji mohan join hands with siddharth

By

Published : Jul 12, 2021, 7:47 PM IST

சென்னை: இயக்குநர் பாலாஜி மோகன் - சித்தார்த் மீண்டும் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இவர் அதன்பிறகு வாயை மூடிப் பேசவும், மாரி உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது அவர் மீண்டும் தனுஷை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பாலாஜி மோகன், சித்தார்த் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவரும் தனுஷ், அதன்பிறகு செல்வராகவன், மாரி செல்வராஜ் ஆகியோருடன் பணியாற்றவுள்ளார். இதன் காரணமாக சித்தார்த் நடிப்பில் பாலாஜி மோகன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது தனுஷுக்காக எழுதப்பட்ட கதையா அல்லது புதிய கதையா என தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:'நவரசா' அப்டேட் - 'கிட்டார் கம்பி மேல நின்று' ஃபர்ஸ்ட் சிங்கிள் 'துரிகை'

ABOUT THE AUTHOR

...view details