தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாகுபலி' இயக்குநருக்கு கரோனா! தனிமைக்குப் பின் பிளாஸ்மா தானத்துக்கு தயார் - கரோனாவால் தனிமைப்படுத்திக்கொண்ட ராஜமெளலி

கரோனா வைரஸ் தொற்று தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உறுதியாகியுள்ளதாக அறிவித்துள்ள திரைப்பட இயக்குநர் ராஜமெளலி, நோய் எதிர்ப்பு சக்த உருவானதும் பிளாஸ்மா தானம் வழங்கயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Director Rajamouli
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி

By

Published : Jul 30, 2020, 10:13 AM IST

ஹைதராபாத்: கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

நானும், எனது குடும்பத்தினரும் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தோம். காய்ச்சல் தானாகவே குறைந்தபோதிலும், பரிசோதனை மேற்கொண்டோம். அதன் முடிவில் கரோனா வைரஸ் தொற்று லேசாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, மருத்துவரின் அறிவுரைப்படி தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்.

அறிகுறிகள் ஏதும் இல்லாதபோதும் நாங்கள் நலமாகவே உள்ளோம். அனைத்து விதமான அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானவுடன் பிளாஸ்மா தானம் செய்யலாம் என முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகுபலி சீரிஸ் படங்கள் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரது நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய கதையாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

இதைத்தொடர்ந்து ராஜமெளலி தற்போது தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிரபலங்கள், ரசிகர்கள் என அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதுடன், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காய்கறி விற்ற பட்டதாரி பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்த சோனு சூட்

ABOUT THE AUTHOR

...view details