அறிமுக நடிகர்கள் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'அழகிய கண்ணே'. இப்படத்தை சீனு ராமசாமியிடம், துணை இயக்குநராகப் பணியாற்றிய விஜயகுமார் இயக்குகிறார்.
சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவருடன் பிரபு சாலமன், விஜய் டிவி பிரபலம் ஆண்ட்ரூஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.