நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து, 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வரும் இப்படத்திற்கு 'அயலான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், தனது 35வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கு பரிசளிக்கும் விதத்தில் அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் கையில் 'லாலிபாப்' உடன் சிவகார்த்திகேயன் நிற்க, மற்றொரு பக்கம் ஏலியன் (வேற்றுக்கிரகவாசி) லாலிபாப்புடன் நிற்கிறது.
'அயலான்' என்று பெயர் வெளியாகும் போதே இப்படம், வேற்றுக்கிரகவாசிகள் குறித்த படமாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டது. அது தற்போது உண்மையாகி உள்ளது என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். 'இன்று நேற்று நாளை' படம் போல் இப்படமும் சயின்ஸ் பிக்சன் படம் என்பதால், ரசிகர்களுக்கு 'அயலான்' படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னதாக, இன்று காலை சிவகார்த்திகேயனின் டாக்டர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஒரே நாளில் சிவகார்த்திகேயனின் இரண்டு "அப்டேட்" கள் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:'நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா?' - இயக்குநர் முருகதாஸுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்