சென்னை:இளைய தளபதி விஜய் நடிப்பில், விஜய் சேதுபதியின் வித்தியாசமான வில்லத்தனத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாஸ்டர். பொங்கலுக்கு வெளியான இந்த படம் திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கரோனா பொது முடக்க ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர், திரையரங்குகள் திறக்க அனுமதியளித்த நிலையில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், "மாஸ்டர் படம் சுமார் தான், ஆனால் வசூலில் சக்கைப் போடு போடுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் படம் வசூலைக் குவித்து வருவதாக கூறிய அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியான பெரிய நடிகர் படம் என்பதாலும், போட்டிக்கு மற்ற மாநிலங்களில் படம் வெளியாகாததாலும் மாஸ்டர் படம் வசூல் செய்து வருகிறது. இந்தியிலும் குறிப்பிடும்படியான வசூல் செய்துவருகிறது என்றார். தொடர்ந்து, மாஸ்டர் படத்துடன் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் படமும் ஓரளவுக்கு நன்றாக ஓடுவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியில் மாஸ்டர் ரீமேக்!