உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இந்த ஊரடங்கை ஹாங்காங் அரசு எச்சரிக்கையுடன் தளர்த்தி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள திரையரங்குகளை சில நிபந்தனைகளுடன் திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சூப்பர் ஹீரோ படமான 'அவெஞ்சர்ஸ்', 'அயன் மேன் 3' ஆகிய திரைப்படங்களை ஹாங்காங் திரையரங்குகளில் மே 28 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.