மார்வெல்ஸ், தனது அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் வைத்து உருவாக்கியுள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியானது.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கான தமிழ் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருந்த நிலையில், அயன் மேன் கதாபாத்திரத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதியும், பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்ட்ரியாவும் பின்னணி குரல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியின் குரல் சற்றும் பொருந்தவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் சென்னையில் 'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து அசத்தியிருக்கிறது . 'பேட்ட' திரைப்படம் 1.12 கோடியும், 'விஸ்வாசம்' 88லட்ச ரூபாயும் வசூலித்திருந்த நிலையில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் 1.17 கோடி வசூலித்துள்ளது.