தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தளபதி 63' படத்தில் முதல் முறையாக விஜயுடன் நடிக்கும் ஷாருக்கான்! - விஜய் 63

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தளபதி 63' படத்தில் முதல் முறையாக பாலிவுட் சிங்கம் ஷாருக்கான் விஜயுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

விஜய் 63

By

Published : Mar 28, 2019, 6:03 PM IST

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக வலம்வரும் நடிகர் விஜய், 'சர்கார்' படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ இயக்கும் புதிய படத்தில் பிசியாக நடித்துவருகிறார். பெயரிடப்படாத இப்படத்திற்கு 'தளபதி 63' என அழைக்கின்றனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ், விவேக், டேனியல் பாலாஜி ஆகியோரும்நடிக்கின்றனர்.

வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் சிங்கம் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் விஜயுடன் சேர்ந்து, சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷாருக்கானை தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது. அவர் நடித்த படங்களை ரசிக்காத நபரும் இல்லை. அந்த வகையில் ஷாருக்கான் முதல் முறையாக விஜயுடன் சேர்ந்து நடிக்க இருப்பதை காண விஜய் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details