கோவாவில் 51ஆவது சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை நடைபெற இருந்தது. ஆனால், கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 51ஆவது சர்வதேச திரைப்பட விழா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 முதல் 24ஆம் தேதிவரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவத்திருந்தார்.
கோவா சர்வதேச திரைப்பட விழா: திரையிடப்படும் தமிழ் படங்கள்! - அசுரன் திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்படவிழாவில் அசுரன், தேன் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
IFFI
தற்போது இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியலை பிரகாஷ் ஜவடேகர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படமும் 'தேன்' திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. அதே போல் மலையாளத்தில், 'சேஃப்', 'ட்ரான்ஸ்', 'கெட்டியோலானு என்டே மலாக்கா', 'தாகீரா' (Thahira) ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன.