விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுரில் இன்று தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் பேனர்,போஸ்டர் ஒட்டாமல் மரம் வளர்த்தளை ஊக்குவிக்கும் விதமாக 1000 மரம்,பழக்கன்றுகளையும் வழங்கினார்கள்.
மரக்கன்றுகள் வழங்கிய ’அசுரன்’ தனுஷ் ரசிகர்கள்! - தனுஷ்
விழுப்புரம்: தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேனர் வைக்கமால் மரக்கன்று வழங்கினார்.
asuran
மேலும், திரையரங்கின் வெளியே சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினர். அப்போது அவர்கள் பேனர் கலாச்சாரத்தை அனைத்து ரசிகர்களும் விட்டு விட்டு மரம் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். மேலும் இதேபோல் அனைத்து திரைப்படத்திற்கும் செய்ய போவதாகவும் கூறினார்கள்.