தமிழில் சினிமாவில் கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அசின். அதன் பிறகு பாலிவுட்டில் அமீர் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டவர்களுடனும் நடித்துள்ளார்.
'சஞ்சாய் ராமசாமி' காதலி அசின் மலரும் நினைவுகள் - வைரலான புகைப்படம் - மைக்ரோமேக்ஸ்
நடிகை அசின் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்கில் வைரலாகியுள்ளது.
asin
பின் 2016ஆம் ஆண்டு, மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இவர்களுக்கு அரின் என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று ஓணம் பண்டிகையை அசின் தனது கணவருடன் கொண்டாடினார். அப்புகைப்படத்துடன் தனது குழந்தை அரின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், 'மலரும் நினைவுகள். கடந்த வருடம் பெற்றோர்களாக முதல் ஓணம்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.