'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் அஸ்வின். நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் தற்போது 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். முக்கோண காதலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
பிரபு சாலமன் படத்தில் அஸ்வின்! - அஸ்வின்
பிரபு சாலமன் இயக்கும் படத்தில் அஸ்வின் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்வின்
அஸ்வினின் அடுத்த படத்தை 'கும்கி', 'மைனா' உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த பிரபு சாலமன் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடைசியாகப் பிரபு சாலமன் ராணா, விஷ்ணு விஷால் நடித்த 'காடன்' படத்தை இயக்கினார்.
அஸ்வின் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட்டி பட்டாசு, அடிபொலி ஆகிய ஆல்பம் பாடல்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.