தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அஷ்வமித்ரா: புதிய பாதையில் ஹரிஷ் உத்தமன் - Ashvamithra - new path of harish uthaman

கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், வளர்ந்து வரும் நடிகர்கள் இதுபோன்ற கதைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறிய பட்ஜெட்டில் வரும் நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவளித்தால் தான், தொடர்ந்து இதுபோன்ற படங்கள் வரும்.

Ashvamithra movie 2021
Ashvamithra movie 2021

By

Published : Sep 6, 2021, 3:29 PM IST

சென்னை:எர்த்லிங் கவுசல்யா இயக்கத்தில் ஹரிஷ் உத்தமன், தரீதா, லிவிங் ஸ்மைல் திவ்யா, மகேஷ்வரி அருணகிரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அஷ்வமித்ரா’.

தந்தையின் இழப்பு தந்த அதிர்ச்சியால் பேசுவதை நிறுத்திவிட்ட மித்ரா எனும் குழந்தையை, பேச்சு பயிற்சியாளர் அருண் தன் அரவணைப்பால் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் ‘அஷ்வமித்ரா’ படத்தின் ஒன்லைன். 6 வயது சிறுமியாக தரீதாவும், பேச்சு பயிற்சியாளராக ஹரிஷ் உத்தமனும் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 30ஆம் தேதி ‘Nee stream' ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு என நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துவருபவர் ஹரிஷ் உத்தமன், அவர் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாண்டியநாடு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹரிஷ் உத்தமன். அதன்பிறகு தனி ஒருவன், பைரவா, கைதி என தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் இணைந்து நடித்துவிட்டார். அவர் தற்போது ‘அஷ்வமித்ரா’ மாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது.

கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், வளர்ந்து வரும் நடிகர்கள் இதுபோன்ற கதைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறிய பட்ஜெட்டில் வரும் நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவளித்தால் தான், தொடர்ந்து இதுபோன்ற படங்கள் வரும். எர்த்லிங் கவுசல்யா மற்றும் ‘அஷ்வமித்ரா’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

இதையும் படிங்க:ஸ்ரீகாந்த் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

ABOUT THE AUTHOR

...view details