தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நூறு கிலோ எடை கூட்டும் முயற்சியில் அசோக் செல்வன்! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் அசோக் செல்வன், புதிய படத்திற்காக தனது உடல் எடையைக் கூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

நூறு கிலோ எடை கூட்டும் முயற்சியில் அசோக் செல்வன்!
நூறு கிலோ எடை கூட்டும் முயற்சியில் அசோக் செல்வன்!

By

Published : Jan 23, 2020, 3:24 PM IST

தமிழ் சினிமாவில் 'தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன்' போன்ற வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மை கடவுளே' திரைப்படம் வரும் பிப்ரவரி-14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து அசோக் செல்வன் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அன்னி சசி இயக்கும் அப்படத்தில் நித்யா மேனன், ரித்து வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் அசோக் செல்வன், 100 கிலோ எடையுடன் கூடிய சமையல் கலைஞர் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக அவர் கூடுதலாக 20 கிலோ எடை கூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத, இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இயக்குநர் அன்னி சசி இயக்கிய 'மாயா' குறும்படத்தில் அசோக் செல்வன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர மலையாளத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் 'அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்னும் வரலாற்று படத்திலும், அசோக் செல்வன் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: சாலையில் சென்றோருக்கெல்லாம் ‘கட்டிப்பிடி’ வைத்தியம்: வைரலாகும் ரிச்சா சத்தாவின் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details