இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் ’சார்பட்டா பரம்பரை’. வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஊரடங்கில் தள்ளிப்போன ரிலீஸ்
இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை அடுத்து, தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன வண்ணம் இருந்தது.
ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை அதிக விலைக்கு அமேசான் பிரைம் தளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கில் ஓடிடியில் வெளியான படங்கள்
கரோனா முதல் அலை ஊரடங்கின்போது ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ’பெண் குயின்’ உள்ளிட்ட படங்களும், தற்போதைய இரண்டாம் அலை ஊரடங்கில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படமும் ஓடிடி தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியன் 2 பட விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிப்பு