’நோட்டா’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கிவரும் திரைப்படம், ‘எனிமி’. இதில் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஆர்யா இனி என் நண்பன் இல்லை...எச்சரித்த விஷால்! - எனிமி விஷால்
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகும் 'எனிமி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் நிற்கும் விஷாலுக்கு எனிமியாக ஆர்யா நடிக்கவுள்ளார். படத்தின் சில காட்சிகளுக்காக படக்குழுவினர் விரைவில் மலேசியா செல்ல இருக்கின்னறர்.
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதையடுத்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆர்யா நீ இனி எனது சிறந்த நண்பராக இருக்கமுடியாது. நான் உனக்கு மிக மோசமான எதிரி என்பதை வரும் 22ஆம் தேித காண்பிக்கிறேன். என்னிடமிருந்து முதல் பஞ்ச்சை வாங்க காத்திரு" என பதிவிட்டார். இதற்கு பதலளிக்கும் விதமாக ஆர்யா தனது ட்விட்டரில், "டேய் நீ முதலில் 22ஆம் தேதி எழுந்து படப்பிடிப்புக்கு வா" என கமெண்ட் செய்துள்ளார்.