'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சவுந்திரராஜன். இவர் தற்போது ஆர்யாவை வைத்து 'டெடி' என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். மேலும் சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர்.
'டெடி'யுடன் அதிரடியில் இறங்கிய ஆர்யா: 'டெடி' பட ட்ரெய்லர் வெளியீடு! - லேட்டஸ் தமிழ் படங்கள்
சென்னை: ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டெடி' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
teddy
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் டெடியுடன் ஆர்யா அதிரடி காட்சிகளில் நடித்துள்ளார். இந்த ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்திலேயே சமூகவலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படம் மார்ச் 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.