'மிருதன்', ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சாயிஷா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார்.
ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் 'டெடி' ! - ஆர்யாவின் டெடி
சென்னை: ஆர்யா நடித்துள்ள 'டெடி' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
teddy
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஏற்கனவே நடந்துமுடிந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இதனையடுத்து மார்ச் 19ஆம் தேதி 'டெடி' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆர்யா-சாயிஷா இணைக்கு 'டெடி' டீசரை பரிசளித்த படக்குழு!