‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அரவிந்த் சாமி, ஸ்ரேயா உள்ளிட்டோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார்.
#Mafia: யுத்தத்தில் ஜெயிப்பது சிங்கத்தின் பலமா... நரியின் தந்திரமா? - வெளியான 'மாஃபியா' டீசர் - மாஃபியா ரஜினி காந்த்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஃபியா' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
mafia
அந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கார்த்திக் நரேனின் மூன்றாவது திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மாஃபியா’. அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே படத்தின் டீசரை பார்த்து ரஜினிகாந்த் கார்த்திக் நரேனை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.