மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில், நடிகர் அருண்விஜய் நடிப்பில் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் எழுதி இயக்கும் படம் 'சினம்'. இந்தப் படத்தில் காவல் ஆய்வாளர் பாரி வெங்கட் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க, அவருக்கு ஜோடியாக பல்லக் லால் வாணி நடிக்கிறார்.
இறுதிகட்ட பணியில் 'சினம்'... திரையரங்கில் சந்திப்போம்: 'பாரி வெங்கட்'டின் லேட்டஸ் ட்வீட்
சென்னை: தனது நடிப்பில் உருவாகியுள்ள 'சினம்' படத்தின் இறுதிகட்டப்பணிகள் நிறைவடையவுள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
arun vijay
அருண் விஜய்யின் 30ஆவது படமான இதன் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரையரங்குகளில் பார்க்கலாம் என அருண் விஜய் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.