அறிவழகன் இயக்கத்தில் 'அருண் விஜய் 31' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அருண் விஜய் தற்போது கலந்துகொண்டுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி - அருண் விஜய் லேட்டஸ் செய்திகள்
நடிகர் அருண் விஜய் அடுத்தாக ஹரி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் தனது மைத்துனர் ஹரி இயக்கும் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து ட்ரம்ஸ்டிக் நிறுவனம் சார்பில், எஸ். சக்திவேல் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை தயாரிக்கிறோம்.
இப்படம் அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இருக்கும். பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும். ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மற்ற விவரங்கள் விரைவில் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருண் விஜய்யும் தனது சமூகவலைதளப்பக்கத்தில் ஹரி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.