'துருவங்கள் பதினாறு' த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் அடுத்ததாக இயக்கிய நரகாசூரன் திரைப்படம் வெளியாகாத நிலையில் கார்த்திக் நரேன் நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா ஆகியோரை வைத்து 'மாஃபியா: சாப்டர் 1' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற காட்சிகள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா ஆகியோர் இடையே நடக்கும் மோதல்களை விவரித்தன. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.