ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டிகளில் ரன்னர் சேம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாடு பயிற்சியாளர் செந்தில்நாதனுக்கு அருண் விஜய் பாராட்டுக்களைத்தெரிவித்தார்.
தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜய் சந்திப்பு! - தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்கள்
நடிகர் அருண் விஜய் தேசிய அளவில் 20 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதையடுத்து போட்டியில் வெற்றிபெற்ற 20 குத்துச்சண்டை வீரர்களையும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்த வரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள். ஒரு விளையாட்டு வீரராகவோ, தடகள வீரராகவோ இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குத்துச் சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல. அவர்கள் பெருமளவில் உடல், மன ரீதியாகத் தயாராக வேண்டியிருக்கும்.
'பாக்ஸர்' திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு இரவு பகலாக, பயிற்சி செய்வதை பார்க்கையில் திகைப்பாக இருக்கிறது. அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது. அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும், ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன். இவர்கள் சந்தித்த சவால்களும், அவற்றை எதிர்த்து வீரர்கள் போரிட்டதும் எனக்கு அதிகளவிலான ஊக்கத்தை அளித்தன" என்றார்.