சென்னை: ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக 'மாஃபியா' திரைப்படம் இருக்கும் என்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அருண் விஜய் கூறினார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக 'மாஃபியா' உருவாகியுள்ளது. வரும் 21ஆம் தேதி படம் வெளியகாவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில், படக்குழுவினர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் அருண் விஜய் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியிருப்பதைக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அருண் விஜய் ரசிகர்கள் அவருக்குப் பெரிய மாலை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Fans celebrated 25YearsOfArunVijay பின்னர் அருண் விஜய் பேசியதாவது:
சினிமா துறையில் 25ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளேன். சிறு வயதிலிருந்து என்னை பார்த்த பத்திரிகையாளர்கள், என்னைப் பற்றி எழுதிய எழுத்துகளே என்னைச் சிறந்த நடிகனாக உருவெடுக்க ஊக்கம் தந்தது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்தக் காலங்களில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் எனக்கு பக்கபலமாக இருந்தனர். நவம்பர் மாதத்துடன் எனது 25 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.
Arun vijay enters 25th year in cinema 'மாஃபியா' எனக்கு முக்கியமான படம். கார்த்திக் நரேன் போன்ற இளம் இயக்குநர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. அவரது பார்வை புதிதாக இருந்தது. கதை கூறும்போதே படத்தில் எப்படி என்னைக் காட்டப்போகிறார் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் அழகான எலி-பூனை சண்டை போன்ற கதையாக படம் அமைந்துள்ளது. இதை ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துள்ளோம். படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு எங்களிடமே இயக்குநர் தாமதமாகத்தான் காட்டினார். படத்தின் காட்சிகளும் சவுண்ட் எஃபெக்ட்ஸ்களும் திரையரங்கில் பார்ப்பவர்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தரும்.
இந்தப் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளைச் சரியாக செய்திருந்ததால், திட்டமிட்டபடி மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்தோம். படக்குழுவினர் அனைவரும் எந்த இடத்திலும் சோர்வடையாமல் முழுமையான எனர்ஜியுடன் பணியாற்றினார்கள்.
'தடம்' படத்துக்குப் பிறகு லைக்கா புரொடக்ஷன் போன்ற பெரிய பேனர் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. எனது கதாபாத்திர அறிமுகப் பாடலை பாடலாசிரியர் விவேக் அருமையான வரிகளால் எழுதியிருக்கிறார். மிகவும் பவர்புல்லாக அந்தப் பாடல் இருக்கும்.
படத்தில் பிரசன்னாவும் நானும் இணைந்து தோன்றும் காட்சிகள் அதிகம் இல்லையென்றாலும், அவருடன் பணியாற்றியது இனிய அனுபவமாக இருந்தது. அவருக்கு எனது நன்றிகள். படத்தில் நிறைய புது விஷயங்களை முயற்சி செய்துள்ளேன்.
தமிழ் பேசும் அழகான ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கர் இருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பின்போது அவரை 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் ஷங்கர் அழைத்தாகக் கூறினார். இங்கே அமைதியாக இருக்கிறார். ஆனால் செட்டில் செம ஜாலியாக இருந்தார்.
ராத்திரி 2 மணிக்கு சீரியஸான காட்சிகளைப் படமாக்கியபோது, நான் டயலாக் பேசவேண்டும். எனது அருகே அமர்ந்திருக்கும் பிரியாவுக்கு டயலாக் கிடையாது என்பதால் ப்ளூடூத் ஆன் செய்து சத்தமாகப் பாடல் கேட்டு கலாட்டா செய்தார்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் பாடல்கள், பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இந்தப் படம் இருக்கும். அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தைப் பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.