2017இல் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'குற்றம் 23' திரைப்படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து திரில்லர் படம் ஒன்றை இயக்கிவருகிறார்.
பார்டர் பட ஃபர்ஸ்ட்லுக் விழா இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துவருகிறார். ராஜசேகர் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தை ஆல்இன்ஆல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்துவருகிறது. இந்தப் படம் வரும் மே மாதம் வெளியிட்ட படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரமாண்டமாக வெளியான அருண் விஜய்யின் பார்டர் பட ஃபர்ஸ்ட்லுக் இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு விழா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் விஜய், விஜயகுமார், இயக்குநர் அறிவழகன், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அருண் விஜய்யின் 31ஆவது படமான இதற்கு பார்டர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரில்லர், ஆக்ஷன் சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லாமல் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி!