தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#ANEETHI ரத்தம் சொட்டச் சொட்ட நிற்கும் அர்ஜுன் தாஸ் - அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'அநீதி' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அர்ஜுன் தாஸ்
அர்ஜுன் தாஸ்

By

Published : Sep 10, 2021, 1:02 PM IST

தமிழ்த் திரையுலகில் 'வெயில்', 'அங்காடித் தெரு', 'அரவான்' உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் வசந்தபாலன்.

இவர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை ஹீரோவாக வைத்து இயக்கிய 'ஜெயில்' திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார்.

துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சிங்கம்புலி, பரணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெயரிடப்படாமல் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், இன்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அத்துடன் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.

'அநீதி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசரில் அர்ஜுன் தாஸ், ரத்தம் சொட்டச் சொட்ட மிகவும் கோபத்துடன் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. டீசரை சிவகார்த்திகேயன், பி.சி. ஸ்ரீராம் இணைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details