தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒரேநாளில் சுந்தர்.சி பாடல் செய்த சாதனை - aranmanai 3 news

'அரண்மனை 3' படத்தில் உள்ள ’ரடடபட்டா’ பாடல் வெளியான ஒரேநாளில் யூ-டியூப் தளத்தில் சாதனை படைத்துள்ளது.

அரண்மனை 3
அரண்மனை 3

By

Published : Sep 1, 2021, 12:51 PM IST

தமிழில் பேய் படங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பேய் படங்களை விரும்பி பார்ப்பதால், ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று பேய் படங்கள்வரை வெளியாகின்றன.

அந்தவகையில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை' முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் 'அரண்மனை 3' உருவாகியுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள, ரடடபட்டா படத்தின் பாடல் நேற்று (ஆகஸ்ட் 31) வெளியானது.

அரண்மனை 3

இந்நிலையில் ’ரடடபட்டா’ பாடல் வெளியான ஒரேநாளில் யூ-டியூப் தளத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்தியா அளவில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் படக்குழுவினர் தனது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடங்கியது 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details