சென்னை: ஆர்யா - ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ள அரண்மனை மூன்றாம் பாகம் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர் சி இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த இரு படங்களும் திகில், நகைச்சுவை கலந்து அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக அமைந்திருந்தது.
இந்த இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர் சி, அரண்மனை மூன்றாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர் சி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் காமெடியனாக நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா, யோகி பாபு, மனோ பாலா, சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.