தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விரைவில் வெளியாகிறது ஏ.ஆர். ரஹ்மானின் ‘லீ மஸ்க்’ & ‘99 சாங்ஸ்’ - 99 songs bgm

ஏ.ஆர். ரஹ்மான் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இரு படங்கள் வெகுவிரைவில் ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

AR Rahman

By

Published : Sep 24, 2019, 2:22 PM IST

லீ மஸ்க் - Le Musk

எழுத்து: ஏ.ஆர். ரஹ்மான் & சாய்ரா ரஹ்மான்

இயக்கம், இசை: ஏ.ஆர். ரஹ்மான்

தயாரிப்பு: கரண் க்ரூவர்

le musk

’லீ மஸ்க்’ ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படமாகும், ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தாரை கொலை செய்த நபர்களை வெவ்வேறு நறுமணத்தின் மூலம் அடையாளம் கண்டு பழிவாங்கும் த்ரில்லர் கதையாக ‘லீ மஸ்க்’ உருவாகியுள்ளது. நோரா அர்னிஸெடர், கய் பர்னட் ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


99 சாங்ஸ் - 99 songs

எழுத்து, தயாரிப்பு, இசை: ஏ.ஆர். ரஹ்மான்

இயக்கம்: விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி

99 songs

சிரமப்படும் பாடகன் ஒருவன் தன்னை உணர்ந்து இசையமைப்பாளராகத் துடிக்கிறான். இந்தக் கதையை மையப்படுத்தியதுதான் ‘99 சாங்ஸ்’, இஹான் பாட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த இரு திரைப்படங்களும் வெகு விரைவில் வெளியாகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details