தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கணுமா...அப்போ இதை செய்யுங்க!

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் தயாரித்துள்ள ’99 சாங்ஸ்’ படத்தை வித்தியசமான முறையில் விளம்பரப்படுத்தி வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

By

Published : Apr 8, 2021, 6:04 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு பணிகளைத் தவிர, திரைப்படம் ஒன்றிற்கு தற்போது கதை எழுதியுள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை அவரே தயாரித்துள்ளார். ’99 சாங்ஸ்’ என்று இப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும்விதமாக வீடியோ ஒன்றை ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதில், ”99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை ரசிகர்கள் தேர்ந்தெடுத்து, அதை பாடி பதிவு செய்து அனுப்பலாம்.

போட்டியில் பங்கேற்பவர்கள், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பாடலைப் பதிவு செய்து, அதை யூ-டியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar எனும் ஹேஷ்டாகைப் பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். அதில் தேர்வு செய்யப்படும் பத்து வெற்றியாளர்கள் என்னையும், 99 சாங்ஸ் குழுவினரையும் காணொலி மூலம் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள். அத்துடன் ஒரு வெற்றியாளருக்கு என்னோடு இணைந்து பணியாற்றும் மாபெரும் வாய்ப்பு வழங்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’சொன்னது சொன்னபடி 'கர்ணன்' திரைப்படம் வெளியாகும்’ - கலைப்புலி தாணு

ABOUT THE AUTHOR

...view details