தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி அளிக்கப்படும் நன்கொடைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
சென்னை: கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
AR Murugadoss
இந்நிலையில், முதலமைச்சரின் வேண்டுகோளையடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (மே 13) நேரில் சந்தித்து, கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்தார்.
முன்னதாக நேற்று (மே 12) முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.