அனுஷ்கா தமிழில் ’ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் சிங்கம், அருந்ததி, தாண்டவம், என்னை அறிந்தால், தெய்வத் திருமகள், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடை கூடி நடித்தார் அனுஷ்கா. எடை கூட்டிய நிலையிலேயே பாகுபலி 2 படத்திலும் நடித்திருந்தார். இறுதிக்கட்ட பணிகளின் போது அனுஷ்காவின் உடலை கிராஃபிக்ஸ் மூலம் மெலிய வைத்து பாகுபலி 2 படம் வெளியானது.
அதை தொடர்ந்து வெளியான பாகமதி உள்ளிட்ட படங்களிலும் அனுஷ்கா அதே தோற்றத்தில் தான் இருந்தார். அதே வேளையில் அவர் சில வருடங்களாக உடல் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
`சாஹோ’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த அவர் அதிகபடியான சண்டை காட்சிகள் இருந்ததால் அந்தப் படத்திலிருந்து அவரே விலகினார் என தகவல் வெளியாகின.