இந்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மிகப்பிபரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக் பாஸ்'. இந்நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. அந்தந்த மொழிகளில் உச்சபட்ச திரைநட்சத்திரங்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படுகிறது.
தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். மலையாளத்தில் நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கினார்.
தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார். இந்நிலையில் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.