'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுராக் காஷ்யப். இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருந்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா 'ஆரண்ய காண்டம்' படத்துக்கு பிறகு இயக்கி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படம் மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த அனுராக் காஷ்யப், தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், 'படம் பார்த்த பிறகு இதில் என் பங்களிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. குமரராஜா பயமற்ற இயக்குநர். இவரிடம் நிறைய திறமை இருக்கிறது. நான் இதெல்லாம் சொல்லக்கூடாது. குமாராஜா இன்னும் என்னாலம் பண்ணி வச்சிருக்கார்னு தெரியல'. என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே அனுராக் காஷ்யப், 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. ஆனால் மறுத்து விட்டேன்' என ட்வீட் செய்திருந்தது குறிப்பிடதக்கது.