'தர்பார்' பட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள, படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
கடந்த 2ஆம் தேதி 'அண்ணாத்த' படத்தின் முதல் சிங்கிளான, ’அண்ணாத்த...’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது.