தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷாருக்கான் படத்தில் பாடல் பாடும் அனிருத்! - ஷாருக்கான் லேட்டஸ்ட் படம்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தில் அனிருத் பாடல் பாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத்-ஷாருக்கான்
அனிருத்-ஷாருக்கான்

By

Published : Jun 29, 2021, 1:57 PM IST

'ராஜா ராணி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இதனையடுத்து விஜய்யை வைத்து 'மெர்சல்', 'தெறி', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் பட்டியலில் நுழைந்தார்.

இவர் தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருக்கும் நிலையில், இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடல் ஒன்றைப் பாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஷாருக்கானுக்கு இதில் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.

இதையும் படிங்க:முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா

ABOUT THE AUTHOR

...view details