தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மருத்துவமனையிலிருந்து வீல் சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா - உடல் நலகுறைவால் அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தொகுப்பாளி அர்ச்சனா வீடு திரும்பினார். அதன்பின் அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

anchor archana
anchor archana

By

Published : Jul 22, 2021, 6:30 PM IST

Updated : Aug 27, 2021, 8:10 PM IST

சென்னை:தொலைக்காட்சித் தொகுப்பாளினியான அர்ச்சனா, கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதிலும் அவர் அந்நிகழ்ச்சியில், 'அன்பு தான் ஜெயிக்கும்' எனப் பேசிய வசனம் இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்நிலையில் அர்ச்சனா திடீரென மூளையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, இரண்டு வாரங்களுக்குப்பின் வீட்டிற்குத் திரும்பினார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன அர்ச்சனா தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி தெரிவித்தார்.

அதன்பின் மருத்துவமனையில் இருந்து வீல் சேரில் வெளியே வந்து, அர்ச்சனா காரில் வீடு திரும்பிய புகைப்படம் சமூக வலைதளப்பக்கத்தில் வைரலாகியுள்ளது.

வீட்டிற்கு வந்த அர்ச்சனா தனக்காக வேண்டிப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொகுப்பாளினி அர்ச்சனா மூளையில் அறுவை சிகிச்சை - சோகத்தில் ரசிகர்கள்

Last Updated : Aug 27, 2021, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details