தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பொங்கல் விடுமுறையை குறிவைத்த ஹிப்ஹாப் ஆதி - hiphop aadhi movies

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பறிவு' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி

By

Published : Dec 15, 2021, 1:20 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் களமிறங்கினார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சிவகுமாரின் சபதம்' படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் அன்பறிவு. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

அஸ்வின் ராம் இயக்கிய இதில் முதல் முறையாக ஹிப்ஹாப் ஆதி, இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதில் காஷ்மீரா, நெப்போலியன், விதார்த், சரத்குமார், ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அன்பறிவு

அன்பறிவு திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால் படத்தை காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இதையும் படிங்க:முதல்முறையாக அதுல்யாவுடன் ஜோடி சேர்ந்த ஹரீஷ் கல்யாண்

ABOUT THE AUTHOR

...view details