'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் விக்ரமுடன் 'ஐ' படத்திலும், தனுஷுடன் 'தங்கமகன்' படத்திலும் நடித்திருந்தார். பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் '2.ஓ' படத்தில் நடித்திருந்தார்.
எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் இவர் தமிழ்மட்டுமல்லாது இந்தி,தெலுங்கிலும் நடித்திருந்தார். மேலும் சில ஆங்கில படங்களிலும் தொலைக்காட்சி தொடரிகளிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜை காதலித்து வந்தார். பின் சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் எமி ஜாக்சன் - ஜார்ஜ் ஜோடியின் நிச்சயதார்த்தம் நேற்று (மே 6) லண்டனில் நடைபெற்றது. இதை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் அதில், “இன்று எங்களுடைய நிச்யதார்தாத்தைக் கொண்டாடுகிறோம். இது எங்களுடைய வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நாள். இந்த நாளை இன்னும் சிறப்பாக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.
விழாவில் எமி தனது வருங்கால கணவர் ஜார்ஜுடன் சேர்ந்து ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏமிக்கு அக்டோபர் மாதம் பிரசவம் நடக்க உள்ள நிலையில் ஏமியும், ஜார்ஜும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.