தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் பிறந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் நாடகங்களுக்கு இசையமைத்து தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
சங்கீத வித்வான் அம்மாபேட்டை கிருஷ்ணமூர்த்தி மறைவு! - சங்கீத வித்வான்
சென்னை: நடிகரும் சங்கீத வித்வானுமாகிய அம்மாபேட்டை கிருஷ்ணமூர்த்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தமிழ் திரை உலகின் பிரபல இசையமைப்பாளர்கள் தேவா, ரெஹேனா, பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் இவரிடம் இசைப் பயிற்சி பெற்றவர்கள். இசைமட்டுமல்லாமல் இவர் வள்ளித்திருமணம், தெய்வானை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது.
90வயதை எட்டிய இவர் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணமடைந்தார். இவரின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட ஏராளமான இசை பிரபலங்கலும் திரைத்துறையினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று மாலை 3.00 மணிக்கு அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ பின்புறம் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.