திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சண்முவேலு(68) - செந்தாமரை(65) தம்பதி. நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணிக்கு வீட்டு வாசலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்களை வயதான தம்பதியர்கள் நாற்காலிகளை வீசியெறிந்து சாதுர்யமாக விரட்டியடித்தனர். கொள்ளையர்களை விரட்டியடிக்கும் திக்... திக்... காணொலி காட்சி இணையத்தில் வைரலானது.
நெல்லை வீரத்தம்பதியை பாராட்டிய பாலிவுட் பிக் பி...! - கொள்ளையர்கள் விரட்டியடிப்பு
மும்பை: திருநெல்வேலியில் கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
amithab batchan
இவர்களது திறமையைக் கண்டு, நெல்லை மாவட்ட காவல் ஆய்வாளர் தம்பதிகளை நேரில் சென்று பாராட்டினார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் வயதான தம்பதியர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இதுகுறித்த செய்தியை ட்விட் செய்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த வீரத் தம்பதியினரை சமூக ஆர்வலர்கள் பலரும் வியந்து பாராட்டி, வருவது தமிழ்நாட்டையே பெருமைப்படுத்தியுள்ளது.