‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் அமிதாஷ் பிரதான். இவர் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுஷின் ‘விஐபி’ படத்தில் வில்லனாக நடித்தவர் அமிதாஷ் பிரதான். அதன்பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனினும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நாளை (ஜூலை 28) தனுஷ் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் தனுஷ் பாடிய ‘நேத்து’ என்ற பாடலைப் பாடி இவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.