தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியில் சர்ச்சையான வெப்சீரிஸ் தெலுங்கு பதிப்பில் அமலாபால் - தெலுங்கில் உருவாகும் லஸ்ட்ஸ்டோரிஸ்

சென்னை: காமத்தின் மீது பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சியை காட்டும்விதமாக அமைந்திருந்த லஸ்ட்ஸ்டோரிஸ் திரைப்படம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேசமயம் இந்தப் படம் அதிகம்பேரால் பார்த்தும் ரசிக்கப்பட்டது. தற்போது அதன் தெலுங்கு பதிப்பில் நடிக்கவுள்ளார் அமலாபால்.

நடிகை அமலாபால்

By

Published : Oct 8, 2019, 1:57 PM IST

நெட்பிளிக்ஸ் ஸ்டீரிமிங் தளத்தில் கடந்தாண்டு வெளியாகி, ஏரளாமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட வெவ்வேறு கதைகளைக் கொண்ட திரைப்படம் லஸ்ட்ஸ்டாரிஸ். இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தொடரை கரண் ஜோகர், அனுராக் காஷ்யப், திபகர் பேனர்ஜி, ஸோயா அக்தர் ஆகிய நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கியிருந்தனர்.

நான்கு கதைகள் சேர்ந்து ஒரே படமாக அமைந்திருந்த லஸ்ட் ஸ்டோரிஸ் தற்போது தெலுங்கில் தயாராகவுள்ளது. இதில் ஒரு கதையில் நடிக்க அமலாபால் கமிட் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் அந்தக் கதையில் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார். இதனை அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ஓ பேபி படத்தை இயக்கிய நந்தின் ரெட்டி இயக்குகிறார். மற்ற மூன்று கதைகளை இயக்குநர்கள் தருண் பாஸ்கர், சங்கல்ப் ரெட்டி, சந்தீப் வங்கா ஆகியோர் இயக்கவுள்ளனர்.

லஸ்ட்ஸ்டோரிஸ் படத்தில் கியாரா அத்வானி தோன்றும் கதையில், குடும்பத்தினர் முன்னிலையில் சுயஇன்பம் அனுபவிப்பது போன்ற காட்சி அவர் நடித்திருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையைக் கிளப்பியது. இதேபோன்று பல்வேறு கவர்ச்சிக் காட்சிகளும் படத்தில் இடம்பெற்று சர்ச்சையைக் கிளப்பின.

இதேபோல் சமீபத்தில் வெளியான ஆடை படத்தில் இரண்டாம் பாதியில் பெரும்பகுதி காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருந்தார் அமலாபால். இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் ஒரு புறமும் சர்ச்சை கருத்துகள் மறுபுறமும் குவிந்தன. அதிலிருந்து தற்போது அடுத்ததாகவும் சர்ச்சை காட்சிகள் நிறைந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details