ஒவ்வொரு ஆண்டும் மே 2ஆவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று (மே10) சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரையுலக பிரபலங்கள் சிலர், தங்களது அம்மா குறித்த அனுபவங்களை, ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அம்மாவிடம் நன்றியும் மன்னிப்பும் கேட்ட அமலா பால் - அமலா பால்
அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மா குறித்த பதிவை அமலா பால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
amala paul
அந்தவகையில், நடிகை அமலா பால் தனது அம்மா குறித்த பதிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாழக்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினேனோ அதை செய்ய எனக்கு அனுமதி தந்தார். என்னுடன் எப்போதும் பக்கபலமாக ஒரு பாடிகார்டை போன்று நின்றுள்ளீர்கள்.
நான் என் மனதை ஆழமாக சுத்தம் செய்யம் விரும்புகிறேன். எனது வீடு...எனது மன தைரியம்... என் வழி...நன்றி அம்மா... எல்லையற்ற அன்பும் மன்னிப்பும் என குறிப்பிட்டுள்ளார்.