’மேயாத மான்’ திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமாரின் இயக்கத்தில் அமலா பால் நடித்து நாளை வெளியாக இருக்கும் படம் 'ஆடை' . படத்தின் சர்ச்சைக்குள்ளான காட்சியை வியாபார நோக்கத்திற்காக போஸ்டர்கள், பேனர்களில் பயன்படுத்த தடைவித்தக்க வேண்டும் என்று 'அனைத்து மக்கள் கட்சி' சார்பில் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமலா பாலின் 'ஆடை' போஸ்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் - டிஜிபியிடம் புகார் - ஆடை சர்ச்சை
சென்னை: "அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ள காட்சியை படத்தின் ப்ரோமோஷனுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜேஷ்வரி பிரியா பேசுகையில், "ஆடை படத்தின் வியாபார நோக்கத்திற்காக அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ள காட்சியை வைத்து போஸ்டர்கள், பேனர்கள் அமைத்து படத்தை ப்ரோமோஷன் செய்கின்றனர். இதனால் சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர். இனி அந்தக் காட்சியை போஸ்டர்கள், பேனர்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அமலா பால் வேறு மாநிலத்தில் பிறந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பற்றி தெரிய வாய்ப்பில்லை" என்றார்.