தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலா பால்? - actress amala paul

நடிகை அமலா பால் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலாபால்?
ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலாபால்?

By

Published : Mar 20, 2020, 8:03 PM IST

’சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளவர் நடிகை அமலா பால். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவா, தெய்வத்திருமகள் போன்ற படங்களில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலா பால்?

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அமலா பால் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், நேரம் வரும் சமயத்தில் அவரை அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்தார்.

தற்போது அமலா பால், மும்பை சேர்ந்த பாடகர் புவனிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும் அமலா பால் இதுகுறித்து எதுவும் தெரிவிக்காததால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:அதர்வாவுக்கு வில்லனான நந்தா

ABOUT THE AUTHOR

...view details